ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹர்சி சுரவீரா ( வயது 27) இவரது பூர்வீகம் இலங்கை ஆகும்.குண்டு பெண்அணியாக இருந்து உள்ளார்.
அதிக உடல் எடையின் காரணமாக இவர், எதிர்மறையான பல்வேறு விமர்சனங்களையும் சிரமங்களையும் சந்தித்துள்ளார்.
குண்டான தோற்றத்தில் இருக்கும் எனது புகைப்படங்களை பெஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால், ஏராளமானோர் எனது உடல் தோற்றம் குறித்து விமர்சித்து உள்ளனர்.
இதனால் அவரது உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ள்ளார். கடந்த 10 மாதங்களாக கடின உடர்யிற்சி மற்றும் உணவுகளால் தனது எடையை 42 கிலோ குறைத்து உள்ளார்.
தனது உடல் எடை குறைப்பு தனது வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி விட்டது என கூறுகிறார் ஹர்சி.
ஹர்சி கூறியதாவது:-
உணவுகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு உணவாக இருந்தாலும் மிகவும் ருசித்து சாப்பிடுவேன்.
இரண்டு பீட்சா மற்றும் 1 லிட்டர் கொக்ககோலா ஆகியவற்றை மிக சாதாரணமாக சாப்பிடுவேன்.
அதுமட்டுமின்றி, அதிக சாதம், கறி, துரித உணவுகள் மற்றும் பீட்சா இவற்றைத்தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவேன். இதன் காரணத்தினாலேயே எனது உடல் எடை அதிகரித்தது 107 கிலோ எடையில் இருந்தேன்.
எனது உடல் எடையை குறைப்பதற்கு நான் மேற்கொண்ட முதல் முயற்சி ஜிம்தான். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணிநேரம் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வேன்.
ஆரம்பத்தில் ஜிம்முக்கு செல்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்போதும் தாமதமாகவே ஜிம்முக்கு செல்வேன். அங்கு சென்றவுடன் ஒரு ஓரமாக நின்று உடற்பயிற்சிகளை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடுவேன்.
நாளடைவில் எனது உடல் எடையில் மாற்றம் ஏற்படவே, எனக்கு ஜிம்முக்கு செல்வதற்கான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அதன்பின்னர் எனது உணவுப்பட்டியலில் மாற்றம் செய்தேன். அதிகமான சாலட் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளையே உட்கொண்டேன். இதுவே எனது உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அனைத்துவிதமான இனிப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை முற்றிலுமாக தவிர்தேன். டயட் ஆரம்பித்த 10 மாதத்தில் 42 கிலோ குறைத்துள்ளேன்.
42 கிலோ எடை குறைத்த நான் எனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தேன்.
இதனைப்பார்த்த பலரும் எனக்கு பெரும் ஆதரவு அளித்தார்கள். எனது பிட்னஸ் ரகசியத்தால் 70,000 பேர் என்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தார்கள்.
உடல் எடை குறைந்த காரணத்தால், எனது வாழ்க்கையில் ஒரு புதுவித மாற்றம் ஏற்பட்டதை என்னால் உணர முடிந்தது.
நான் குண்டாக இருந்தபோது என்னை அணுகவே சில பேர் யோசித்தார்கள். ஆனால், தற்போது நட்புறவுடன் பேசிவருகிறார்கள் என கூறுகிறார் ஹர்சி சுரவீரா.